Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கிரிக்கெட் வீரர்கள் காயம் குறித்து புரியாமல் மக்கள் தேவையற்று பேசுகின்றனர்; கங்குலி கோபம்

கிரிக்கெட் வீரர்கள் காயம் குறித்து புரியாமல் மக்கள் தேவையற்று பேசுகின்றனர்; கங்குலி கோபம்

By: Nagaraj Sat, 14 Nov 2020 1:13:59 PM

கிரிக்கெட் வீரர்கள் காயம் குறித்து புரியாமல் மக்கள் தேவையற்று பேசுகின்றனர்; கங்குலி கோபம்

கிரிக்கெட் வீரர்களின் காயம் குறித்து புரிந்து கொள்ளாமல் மக்கள் தேவையற்று பேசுகிறார்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3-வகையாக கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அணித் துணைக்கேப்டன் ரோகித் காயத்தால் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

ganguly,players injured,people,do not understand,bcci ,கங்குலி, வீரர்கள் காயம், மக்கள், புரிந்து கொள்ளவில்லை, பிசிசிஐ

வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டிருந்த போதிலும் அணியில் சேர்க்கப்பட்டார். சகா காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழும்பிய நிலையில் வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் காயம் குறித்து புரிந்து கொள்ளாமல் மக்கள் தேவையற்று பேசுகிறார்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ''வீரர்கள் காயம் குறித்து இந்திய பிசியோவிற்குத் தெரியும். என்சிஏ-வுக்குத் தெரியும். பிசிசிஐ எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து மக்களுக்கு தெரியும். பிசிசிஐ டிரைனர்ஸ், பிசியோ, சகா ஆகியோருக்கு தெரியும். அவருக்கு இரண்டாம் நிலை ஹாம்ஸ்டிரிங் பிரச்சினை உள்ளது. மக்கள் காயம் குறித்து புரிந்து கொள்ளவில்லை. அதனால் தேவையில்லாமல் பேசுகிறார்கள்'' என்றார்.

Tags :
|