Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மூன்று லீக்குகளில் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டா சாதனை

மூன்று லீக்குகளில் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டா சாதனை

By: Karunakaran Wed, 22 July 2020 09:14:58 AM

மூன்று லீக்குகளில் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டா சாதனை

கால்பந்து போட்டியில் புகழ்பெற்ற வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். இந்நிலையில் இத்தாலியில் ‘சீரி ஏ’ கிளப் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு ‘சீரி ஏ’ கிளப் கால்பந்து போட்டியின் ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது.

இந்த லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணி, லாஜியோ அணிகள் மோதின. ஆட்ட முடிவில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் லாஜியோவை வீழ்த்தியது. யுவென்டஸ் அணியில் இரண்டு கோல்களையும் 51 மற்றும் 54-வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.

cristiano ronaldo,50 goals,english premier league,la liga,serie a ,கிறிஸ்டியானோ ரொனால்டோ, 50 கோல்கள், ஆங்கிலம் பிரீமியர் லீக், லா லிகா, சீரி ஏ

இதுவரை 34 ஆட்டங்களில் ஆடியுள்ள யுவென்டஸ் அணி 25 வெற்றி பெற்றுள்ளது. மேலும் யுவென்டஸ் அணி 5 டிரா, 4 தோல்வி என்று 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ‘சீரி ஏ’ போட்டியில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாக இதுவரை 51 கோல்கள் அடித்துள்ளார். ‘சீரி ஏ’ போட்டியில் ரொனால்டோ 61 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் ‘சீரி ஏ’, ‘லா லிகா’, இங்கிலாந்து பிரிமீயர் லீக் ஆகிய மூன்று போட்டிகளில் குறைந்தது 50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ படைத்துள்ளார். மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து அறிய சாதனையை படைத்துள்ளார்.

Tags :