Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் பஞ்சாபுடன் நாளை சிஎஸ்கே மோதல்

ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் பஞ்சாபுடன் நாளை சிஎஸ்கே மோதல்

By: Karunakaran Sat, 03 Oct 2020 4:34:28 PM

ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் பஞ்சாபுடன் நாளை சிஎஸ்கே மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் 9 முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து, ஒரு வாரம் ஓய்வுக்குப்பின் சென்னை அணி நேற்று களம் இறங்கியது. ஆனால் தோல்வியடைந்துவிட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 4-ல் மூன்றில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இரண்டு அணிகளும் ஒரே நிலையில்தான் உள்ளது.

இந்த போட்டியில் தோல்வியடைந்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்புக்கு வேட்டு வைத்துவிடும். துபாய் ஆடுகளங்களில் சரியான திட்டமிடுதல் உடன் சென்றால்தான் சாதிக்க முடியும். 9.30 மணிக்குப் பிறகு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் முதல் பந்தில் இருந்தே பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். இதனால் சேஸிங் செய்வது எளிது. இந்தக் கணக்கில்தான் டாஸ் வென்ற அணிகளில் எல்லாம் பந்து வீச்சை தேர்வு செய்து மண்ணைக் கவ்வின.

csk,punjab,hat-trick,defeat ,சி.எஸ்.கே, பஞ்சாப், ஹாட்ரிக், தோல்வி

மைதானம் மிகப்பெரியது என்பதல் மிடில் ஓவர்களில் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ஒன்றிரண்டு ரன்கள், அவ்வப்போது பவுண்டரிகள் விரட்டி ரன்கள் சேர்க்க வேண்டும். ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் விஜய் நீக்கப்பட்டார். வாட்சனுடன் டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரராக களம் இறங்கினார். வாட்சன் வழக்கம் போல் சொதப்ப பிரயோஜனம் இல்லாமல் போனது. டோனி வாணவேடிக்கை நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

சென்னை அணியில் பேட்டிங் சொதப்பல் மீண்டும் நடைபெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றை எதிர்பார்க்க முடியாது. பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் வேகப்பந்து வீச்சில் வெயின் பிராவோ இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் பலம். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணியில் பஞ்சாபும் ஒன்று. அந்த அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்ப்பதே தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல்தான்.




Tags :
|
|