Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் 13-வது சீசனில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் சிங் ஒப்பந்த உறவை முறித்துக் கொள்ள சிஎஸ்கே முடிவு

ஐபிஎல் 13-வது சீசனில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் சிங் ஒப்பந்த உறவை முறித்துக் கொள்ள சிஎஸ்கே முடிவு

By: Karunakaran Fri, 02 Oct 2020 7:10:55 PM

ஐபிஎல் 13-வது சீசனில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் சிங் ஒப்பந்த உறவை முறித்துக் கொள்ள சிஎஸ்கே முடிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 13-வது கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ரெய்னா அணியுடன் சென்றிருந்தார். வீரர்கள் கோரன்டைனில் இருந்தபோது, சொந்த காரணத்திற்கான இந்தியா திரும்பினார். அதன்பின் ஒட்டுமொத்த தொடரிலும் இருந்து விலகினார். மேலும் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவில்லை. இவரும் விலகுவதாக தெரிவித்தார்.

டோனிக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரெய்னா விலகியதாக கூறப்பட்டது. மேலும் அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இருவரையும் 2018-ல் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ரெய்னாவுக்கு 11 கோடி ரூபாய் சம்பளமும், ஹர்பஜன் சிங்கிற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

csk,raina,harbhajan singh,ipl 13th season ,சி.எஸ்.கே, ரெய்னா, ஹர்பஜன் சிங், ஐ.பி.எல் 13 வது சீசன்

தற்போது ஐபிஎல் விதிப்படி இந்த சீசனுடன் இருவருடன் உள்ள 3 வருட ஒப்பந்தம் முடிவடைகிறது. தற்போது, இருவரின் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் முறித்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வருடத்திற்கான ஏலம் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியே.

இதுகுறித்து அந்த அணியின் சிஇஓ-விடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் இந்த செய்தியை மறுக்கவில்லை. சென்னை அணி இருவரையும் வெளியேற்றினால், ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகள் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. அடுத்த வருடத்திற்கான ஏலம் நடைபெறுவது கேள்விக்குறியே. 6 மாத கால இடைவெளி இருக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றபட்டால் அடுத்த ஐபிஎல் தொடர் பங்கேற்பது சந்தேகம்தான்.

Tags :
|
|