Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டோனி தனது ஓய்வு முடிவு குறித்து வெளியிடும்போது 19.29 நேரத்தை குறிப்பிட்டது குறித்து சிஎஸ்கே விளக்கம்

டோனி தனது ஓய்வு முடிவு குறித்து வெளியிடும்போது 19.29 நேரத்தை குறிப்பிட்டது குறித்து சிஎஸ்கே விளக்கம்

By: Karunakaran Sun, 16 Aug 2020 5:00:13 PM

டோனி தனது ஓய்வு முடிவு குறித்து வெளியிடும்போது 19.29 நேரத்தை குறிப்பிட்டது குறித்து சிஎஸ்கே விளக்கம்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, ஐசிசி-யின் மூன்று டிராபிகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்றார். இந்நிலையில் நேற்று இந்தியாவின் 74-வது சுதந்திரன தினம் அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதிகப்படியான உங்கள் அன்பிற்கும், கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு தெரிவித்ததற்கும் நன்றி என டோனி தனது ஓய்வு அறிவிப்பில் கூறினார். அதன்பின், 19.29 மணி நேரத்தில் இருந்து என்னை ஓய்வு பெற்றவராக கருதலாம் என்று கூறினார்.

csk,time 19.29,dhoni,retirement decision ,சி.எஸ்.கே, நேரம் 19.29, தோனி, ஓய்வூதிய முடிவு

இன்ஸ்டாகிராமில் அவர் ஏன் 19.29 நேரத்தை தேர்வு செய்தது, எல்லோருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி வி்ஸ்வநாதனுக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனிடம் இருந்து போன் கால் வந்த பின்னர்தான் 19.29 நேரம் வெளிவந்துள்ளது. மும்பை மிர்ரரில் டோனி ஓய்வு குறித்து எழுதியுள்ளது குறித்து ஸ்ரீனிவாசன் உடனடியாக காசி விஸ்வநாதனிடம் போன் செய்து கேட்டறிந்துள்ளார்.

எப்போது இந்த முடிவு எடுத்தீர்கள்? என்ற காசி விஸ்வநாதன் கேட்டபோது, டோனி, 19.29 மணிக்கு என்று கூறியதாக இன்ஸ்டாகிமில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பூமியின் தெற்குப்பகுதியின் பெரும்பாலான நாடுகளில் இந்த நேரத்தில்தான் சூரியன் மறையும். அதனால்தான் அவர் அந்த நேரத்தை தேர்வு செய்தார் என்று நினைக்கிறேன் என கூறினார்.

Tags :
|
|