Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன் அணிகளை தவிர்த்துவிட முடியாது - ஷேன் வார்னே

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன் அணிகளை தவிர்த்துவிட முடியாது - ஷேன் வார்னே

By: Karunakaran Thu, 01 Oct 2020 2:44:05 PM

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன் அணிகளை தவிர்த்துவிட முடியாது - ஷேன் வார்னே

13-வது ஐபிஎல் போட்டி கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றும் இந்த போட்டியில் தற்போது 11 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 8 அணிகளுமே குறைந்தது ஒரு வெற்றியாவது பெற்றுள்ளன. ஐபிஎல் தொடர் தொடங்கியதுமே எந்தெந்த அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் என்பதை எளிதாக கணித்து விடலாம். ஆனால் தற்போது 8 அணிகளுமே குறைந்தது ஒரு வெற்றியாவது பெற்றுள்ளதால், பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை கணிப்பது கடினமானது எனத் தோன்றுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகருமான ஷேன் வார்னே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து கணித்துள்ளார். வார்னே பினேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து கூறுகையில், நான்கு அணிகள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதில் இடமுண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடந்து செல்வது கடினமானது என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

current champion,former champion,ipl play-offs,shane warne ,தற்போதைய சாம்பியன், முன்னாள் சாம்பியன், ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ், ஷேன் வார்ன்

மேலும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் பிளே ஆஃப்ஸ் சுற்றில் இருக்கும். அல்லது இருந்திருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியும் தகுதி பெறும். அவர்கள் மிகவும் பேலன்ஸ் அணியை கொண்டுள்ளனர். அடுத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நோக்கி சார்ந்திருக்க வேண்டும். ஏராளமான பையர்பவர் பெற்றுள்ளது. ஆகவே, 4-வது அணியாக அது இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்தில் வென்றாலும், அடுத்து நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் தோல்வியையே தழுவியுள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் தோல்வி பெற்றிருந்தாலும், அதன்பின் நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

Tags :