Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்க வாய்ப்பு

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்க வாய்ப்பு

By: Nagaraj Fri, 24 Feb 2023 10:52:37 PM

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்க வாய்ப்பு

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த அணி கேப்டனாக ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், கார் விபத்து காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, லீக் போட்டிகள் அகமதாபாத்தில் மார்ச் 31-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி மே 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் பூர்வாங்க பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. நடப்பு சாம்பியனான பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அகமதாபாத்தில் ஏற்கனவே பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.

ahmedabad,gujarat,ipl,rishabh , கார், கார் விபத்து, டெல்லி, ரிஷப் பந்த்

தோனி தலைமையிலான சென்னை அணி வரும் மார்ச் 2ம் தேதி பயிற்சி முகாமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து அணிகளும் தங்களது அணி கேப்டன்களை அறிவித்துள்ளதால் டெல்லி அணியின் கேப்டன் யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு டெல்லி அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் உள்ள வார்னர் தலைமையில் 2016-ம் ஆண்டு ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி அணியின் துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியின் கேப்டன், துணை கேப்டன் யார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே தெரியவரும்.

Tags :
|