Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மான்செஸ்டர் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முடிவடைந்தது

மான்செஸ்டர் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முடிவடைந்தது

By: Karunakaran Sat, 18 July 2020 12:34:30 PM

மான்செஸ்டர் டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முடிவடைந்தது

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியபோது, முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று இரண்டாம் நாள் தொடங்கியபோது, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்திருந்தது.

manchester test,england,west indies,cricket ,மான்செஸ்டர் டெஸ்ட், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், கிரிக்கெட்

அதன்பின், வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வேட் மற்றும் ஜான் கேம்பால் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஜான் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம் கர்ரன் பந்து வீச்சில் எல்டபுள்யூ முறையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஜோசப் நிதான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிராத்வேட் 6 ரன்களுடனும், ஜோசப் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tags :