Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் - ரவி சாஸ்திரி அழைப்பு

டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் - ரவி சாஸ்திரி அழைப்பு

By: Karunakaran Wed, 14 Oct 2020 2:47:04 PM

டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் - ரவி சாஸ்திரி அழைப்பு

உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான டிவில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் ஆவார். இவர் 2018-ல் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். தற்போது, 36 வயதான டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன் எடுத்தார். பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவர் ஒருவரால் மட்டுமே அதிரடியாக ஆட முடிந்தது. அவரது ஆட்டத்தை கேப்டன் வீராட் கோலி பாராட்டி இருந்தார்.

de villiers,international tournaments,ravi shastri,indian team coach ,டிவில்லியர்ஸ், சர்வதேச போட்டிகள், ரவி சாஸ்திரி, இந்திய அணி பயிற்சியாளர்

தற்போது, டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அழைப்பு விடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக டிவில்லியர்சின் ஆட்டம் அற்புதமாகவும், அதிசயமாகவும் இருந்தது. இதை பார்க்கும்போது கனவா? நினைவா? என்று எண்ண தோன்றியது என ரவி சாஸ்திரி கூறினார்.

மேலும் அவர், இதனால் நீங்கள் ஓய்வுக்கு குட்பை சொல்லிவிட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விளையாட வாருங்கள் என கூறியுள்ளார். பெங்களூர் அணியில் முக்கிய அதிரடி பேட்ஸ்மேன்களாக டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி உள்ளனர்.

Tags :