Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் ஜாக் காலிசை சேர்க்க முடிவு

‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் ஜாக் காலிசை சேர்க்க முடிவு

By: Karunakaran Sun, 23 Aug 2020 6:01:36 PM

‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் ஜாக் காலிசை சேர்க்க முடிவு

சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்கள் ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைக்கப்படுவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக ‘ஹால் ஆப் பேம்’ என்ற பட்டியலை உருவாக்கியுள்ளது.

தற்போது அந்த பட்டியலில் புதிதாக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக் காலிசை சேர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,289 ரன்னும், ஒரு நாள் போட்டியில் 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

jack callis,hall of fame,south africa,all rounder ,ஜாக் காலிஸ், ஹால் ஆஃப் ஃபேம், தெற்கு ஆப்பிரிக்கா, ஆல் ரவுண்டர்

தென்ஆப்பிரிக்கா அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கிய ஜாக் காலிசை கவுரவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் அவரது பெயரை இணைக்கவுள்ளது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.

மேலும் இந்த புகழ்பெற்ற பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை லிசா தாலேகர் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் ஆகியோரும் சேர்க்கப்படுகின்றனர். ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் ஜாக் காலிஸ் இணைக்கப்படுவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags :