Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அபுதாபியில் இன்று டெல்லி அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதல்

அபுதாபியில் இன்று டெல்லி அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதல்

By: Karunakaran Sun, 11 Oct 2020 2:32:51 PM

அபுதாபியில் இன்று டெல்லி அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதல்

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 23-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

துபாயில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது.

delhi team,mumbai indians,abu dhabi,ipl 2020 ,டெல்லி அணி, மும்பை இந்தியன்ஸ், அபுதாபி, ஐபிஎல் 2020

டெல்லி கேப்பிடல்ஸ் - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், மும்பை அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுமே கடைசியாக விளையாடிய 3 ஆட்டத்திலும் வென்று ஹாட்ரிக் சாதனை புரிந்தன.

டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. மும்பை அணி 5-வது வெற்றியை அபாரமாக பெற்று முதல் இடத்திற்கு முன்னேறும் வேட்கையில் இருக்கிறது. டெல்லி அணியில் கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர், பிரித்விஷா, தவான், ரி‌ஷப்பண்ட், ஸ்டோனிஸ், ரபடா, அஸ்வின் போன்ற சிறந்த வீரர்களும், மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இசான் கி‌ஷன், ஹர்த்திக் பாண்ட்யா, போல்லார்ட், குயின்டன் டிகாக், பும்ரா, போல்ட், பேட்டின்சன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

Tags :