Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்த ஐபிஎல் சீசனில் அதிக முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த அணி டெல்லி அணி

இந்த ஐபிஎல் சீசனில் அதிக முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த அணி டெல்லி அணி

By: Karunakaran Fri, 06 Nov 2020 6:31:42 PM

இந்த ஐபிஎல் சீசனில் அதிக முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த அணி டெல்லி அணி

ஐபிஎல் குவாலிபையர்-1 நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி அணியும், மும்பை அணியும் மோதின. இதில் மும்பை முதலில் பேட்டிங் செய்தது. அதன்பின், 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சால் டெல்லி அணியின் வீரர்கள் திணறினர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரென்ட் பவுல்ட் முதல் ஓவரை வீசினார். 2-வது பந்தில் பிரித்வி ஷாவையும், இதே ஓவரில் ரகானேவையும் வீழ்த்தினார். இருவரும் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. மெய்டன் ஓவராக அமைந்தது. டெல்லி அணி இந்த சீசனில் முதல் ஓவரில் விக்கெட்டை அதிக முறை இழந்த அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

delhi team,lost wickets,first over,ipl season ,டெல்லி அணி, இழந்த விக்கெட்டுகள், முதல் ஓவர், ஐபிஎல் சீசன்

இதுவரை மொத்தம் டெல்லி அணி 15 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 9 முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து மோசமான சாதனையை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா மூன்று முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா இரண்டு முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்ததுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தலா ஒருமுறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்துள்ளது.


Tags :