Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூர் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறிய டெல்லி அணி

பெங்களூர் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறிய டெல்லி அணி

By: Karunakaran Tue, 06 Oct 2020 2:53:56 PM

பெங்களூர் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறிய டெல்லி அணி

துபாயில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது இதனால் டெல்லி அணி 59 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 39 பந்தில் 43 ரன் (2 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரபடா 24 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். ஆன்ரிச் நார்ட்ஜே, அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

delhi team,bangaloreteam,first place,points table ,டெல்லி அணி, பெங்களூரு, முதல் இடம், புள்ளிகள் அட்டவணை

இந்த வெற்றி, டெல்லி அணி பெற்ற 4-வது வெற்றி ஆகும். அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் 8 புள்ளிகளைப் பெற்று அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்தினால் அந்த அணி முதல் இடத்துக்கு வர வாய்ப்புள்ளது.

பெங்களூர் அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 6-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 9-ந்தேதி சார்ஜாவில் சந்திக்கவுள்ளது. பெங்களூர் அணி அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை 10-ந்தேதி எதிர்கொள்ளவுள்ளது.

Tags :