Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்ட்ஜே 156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்ட்ஜே 156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை

By: Karunakaran Thu, 15 Oct 2020 7:18:41 PM

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்ட்ஜே 156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியதில் முதலில், விளையாடிய டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. பின்னர் பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ஆனால் டெல்லி அணியின் பந்து வீச்சை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 148 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்த போட்டியில் டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே புயல் வேகத்தில் பந்து வீசினார். அவர் ஒரு பந்தை மணிக்கு 156.2 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 2012-ம் ஆண்டுக்குப்பின் அதிவேகத்தில் வீசப்பட்ட பந்து இதுவாகும்.

delhi,fast bowler,anrich nordje,156 kmph ,டெல்லி, வேகப்பந்து வீச்சாளர், அன்ரிச் நோர்ட்ஜே, 156 கி.மீ.

டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். 156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசியது குறித்து அன்ரிச் நோர்ட்ஜே கூறுகையில், போட்டி முடிந்த பின்னர்தான் நான் கேட்டு தெரிந்து கொண்டேன். அந்த நேரத்தில் எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் அவர், வேகமாக பந்தை வீச நான் கடின பயிற்சி மேற்கொண்டேன். பந்தை வேகமாக வீசியதால் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையிலேயே நான் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய் விரும்புகிறேன். இதுதான் முக்கியமன விசயம் என்று தெரிவித்தார்.

Tags :
|