Advertisement

டெவாட்டியா மடைதிறந்த வெள்ளம் போன்று விளையாடுவார் - ஸ்மித்

By: Karunakaran Mon, 28 Sept 2020 5:53:35 PM

டெவாட்டியா மடைதிறந்த வெள்ளம் போன்று விளையாடுவார் - ஸ்மித்

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 9வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயலஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது. பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயலஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும், ஸ்டீவ் ஸ்மித்தும் விளையாடினர். இதில் சஞ்சு சாம்சன் அதிரடியை வெளிப்படுத்தினார். இதில் ராகுல் டெவாட்டியா சிறப்பாக ஆடி தொடர்ந்து சிக்ஸர் அடித்தார்.

devatia,flood,smith,rajastan captain ,டெவாட்டியா, வெள்ளம், ஸ்மித், ராஜஸ்தான் கேப்டன்

இந்நிலையில் டெவாட்டியா குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் கூறுகையில், வலைப் பயிற்சியின்போது ராகுல் டெவாட்டியாவிடம் என்னதை பார்த்தோமோ, அதை காட்ரெலுக்கு எதிராக செய்தார். அவருக்கு ஒரு பந்து சரியாக பேட்டில் பட்டுவிட்டால், அதன்பின் மடைதிறந்த வெள்ளம் போன்று விளையாடுவார் என ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். அவர் இதயத்தை காட்டிவிட்டார் என்று கூறினார்.

மேலும் அவர், டைம்அவுட் இடைவெளியின்போது அவர் என்னிடம், இன்னும் நமக்கு நம்பிக்கை உள்ளது. மைதானத்தின் எல்லா பக்கமும் சஞ்சு சாம்சனின் அடித்த பந்து சென்றது. ஒவ்வொருவர் மீதும் நெருக்கடியை செலுத்துபவர். நாங்கள் மிகப்பெரிய மைதானத்திற்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஷாட்ஸ் எந்த மைதானத்திலும் சிக்சராகத்தான் இருக்கும் என்று கூறினார்.

Tags :
|
|