Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நீண்ட நாட்கள் பேட்டிங் செய்யாமல் இருந்ததன் காரணமாக 7-வது வரிசையில் களம் இறங்கியதாக டோனி விளக்கம்

நீண்ட நாட்கள் பேட்டிங் செய்யாமல் இருந்ததன் காரணமாக 7-வது வரிசையில் களம் இறங்கியதாக டோனி விளக்கம்

By: Karunakaran Wed, 23 Sept 2020 4:46:17 PM

நீண்ட நாட்கள் பேட்டிங் செய்யாமல் இருந்ததன் காரணமாக 7-வது வரிசையில் களம் இறங்கியதாக டோனி விளக்கம்

ஐ.பி.எல். போட்டியின் நேற்றை ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இதன் மூலம் சென்னை அணி முதல் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஜ் வீழ்த்தி இருந்தது. இதுகுறித்து சி.எஸ்.கே. கேப்டன் டோனி கூறுகையில், 217 ரன் என்ற கடினமான இலக்கு இருக்கும்போது தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த ரன் இலக்கை எட்டமுடியும். எங்களது தொடக்கம் சிறப்பாக அமையாததால் இந்த கடினமான ரன் இலக்கை எட்ட முடியவில்லை என்று கூறினார்.

dhoni,field,batting,csk ,தோனி, பீல்ட், பேட்டிங், சி.எஸ்.கே.

நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. அதோடு 14 நாட்கள தனிமைப்படுத்துதல் உதவவில்லை. இதன் காரணமாகவே நான் 7-வது வரிசையில் களம் இறங்கினேன். சாம் கர்ரனுக்கு வாய்ப்புகளை வழங்க வெவ்வேறு விசயங்களை முயற்சிக்க விரும்பினோம். டு பிளிஸ்சிஸ் தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார் என டோனி விளக்கமளித்தார்.

மேலும் அவர், ராஜஸ்தான் அணியில் சாம்சனும், ஸ்டீவ் சுமித்தும் சிறப்பாக ஆடினார்கள். அதோடு அவர்களது பந்து வீச்சும் நன்றாக இருந்தது. தவறு செய்யாமல் நேர்த்தியாக வீசினார்கள். எங்களது பந்து வீச்சாளர்கள் பல்வேறு பிழைகளை செய்தனர். நோபாலை கட்டுப்படுத்தவில்லை. ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags :
|
|