Advertisement

ஓய்வு பற்றிய கேள்விக்கு பட்டென்று பதிலளித்த தோனி

By: Nagaraj Wed, 03 May 2023 11:54:23 PM

ஓய்வு பற்றிய கேள்விக்கு பட்டென்று பதிலளித்த தோனி

லக்னோ: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த வர்ணனையாளரின் கேள்விக்கு தோனி அளித்த பதில் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தோனி என்ன சொன்னார் தெரியுங்களா?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு முன்பாக மழைத்தூறல் விழுந்து கொண்டே இருந்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. 3 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ், மழை காரணமாக 3.30 க்கு போடப்பட்டது. இதில் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.

answer,dhoni,excitement,fans,question,rest , உற்சாகம், ஓய்வு, கேள்வி, தோனி, பதில், ரசிகர்கள்

டாஸின் போது, நடுவரும் வர்ணனையாளருமான டேனி மாரிசன் தோனியிடம், ‘இந்த மைதானத்தில் நீங்கள் விளையாடும் கடைசி போட்டி இதுதான். இதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?’ அவர் கேட்டார். இதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த தோனி, ‘நீங்களே இதுதான் இங்கு எனக்கு கடைசி மேட்ச் என்று முடிவு செய்துவிட்டீர்கள்’ என்றார். தொடர்ந்து பேசிய டேனி மோரிசன் ரசிர்களை பார்த்தவாறு, ‘அவர் அடுத்த ஆண்டு மீண்டும் இதே மைதானத்தில் விளையாட வருவார்’ என்று கூறினார்.

தோனி சிரித்துக்கொண்டே மாரிசனின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தார். இந்த ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்த எந்த உறுதியான தகவலையும் தோனி வெளியிடவில்லை.

சமீபத்தில், சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், தோனி தனக்கு ஓய்வு குறித்த எந்த அறிகுறியையும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார். இன்று ஓய்வு குறித்த கேள்விக்கு தோனி அளித்த பதில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|