Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டோனியின் ஓய்வு முடிவு அறிவிப்பு நெஞ்சை பிளந்தது போன்று இருந்தது - கே.எல். ராகுல்

டோனியின் ஓய்வு முடிவு அறிவிப்பு நெஞ்சை பிளந்தது போன்று இருந்தது - கே.எல். ராகுல்

By: Karunakaran Wed, 19 Aug 2020 6:39:18 PM

டோனியின் ஓய்வு முடிவு அறிவிப்பு நெஞ்சை பிளந்தது போன்று இருந்தது - கே.எல். ராகுல்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி, கடந்த சனிக்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.டோனியின் ஓய்வுக்கு பின், ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கான விக்கெட் கீப்பர் போட்டியில் முன்னணியில் கே.எல். ராகுல் உள்ளார்.

கே.எல்.ராகுலுக்கு அடுத்து ரிஷப் பண்ட் உள்ளார். இந்நிலையில், டோனியின் ஓய்வு தன்னை உலுக்கியதாகவும், இதயம் பிளந்தது போன்று இருந்ததாகவும் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எம்.எஸ். டோனியின் ஓய்வு முடிவு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் உண்மையிலேயே இதயம் பிளந்தது போன்று உணர்ந்தேன்.என்று கூறினார்.

dhoni,retirement,kl rahul,indian cricket ,தோனி, ஓய்வு, கே.எல்.ராகுல், இந்திய கிரிக்கெட்

இதுகுறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், அணியில் உள்ள எல்லோரும் அல்லது அவருடன் விளையாடி வீரர்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரியாவிடை அளிக்க விரும்பினோம் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். இன்னும் ஒரு போட்டியில் அவர் விளையாட விரும்பினால், அவருக்கு சிறப்பாக ஏதாவது செய்ய வாய்ப்பாக அமைந்திருக்கும். எங்களை அவர் மிகவும் நன்றாக வழி நடத்தினார். அவர் எங்களிடம் விளையாடுங்கள். உங்களுடைய திறமையை வெளிப்படுத்துங்கள், தவறுகள் நடந்தால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்பார் என்று கூறினார்.

மேலும் அவர், எங்களுக்கு எப்போதாவது சந்தேகம் ஏற்பட்டால், ஏதாவது விடை கிடைக்க ஒருவரை அணுக வேண்டுமென்றால், அவர் எப்போதுமே அங்கே இருப்பார். வீரர்களை எப்போது கொண்டு வர வேண்டும் என்பது அவருக்கும் தெரியும். அவரது ஓய்வு குறித்து அறிந்ததும் வார்த்தையே வரவில்லை. அதாவது, அவர் எவ்வளவு செய்துள்ளார்? எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியுள்ளார், அவரால் எவ்வளவு பேர் உத்வேகம் அடைந்துள்ளார். ஆடுகளத்தில் மட்டுமல்ல, ஆடுகளத்திற்கும் வெளியே சாதனைகள் படைத்துள்ளார். இப்படிபட்ட ஒருவரை பற்றி என்ன சொல்வீர்கள்? என புகழ்ந்து கூறினார்.

Tags :
|