Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டோனி முழு உடல்தகுதியுடனும், மனரீதியாக மிகவும் வலுவுடனும் உள்ளார் - ஸ்டீபன் பிளமிங்

டோனி முழு உடல்தகுதியுடனும், மனரீதியாக மிகவும் வலுவுடனும் உள்ளார் - ஸ்டீபன் பிளமிங்

By: Karunakaran Sat, 19 Sept 2020 8:35:19 PM

டோனி முழு உடல்தகுதியுடனும், மனரீதியாக மிகவும் வலுவுடனும் உள்ளார் - ஸ்டீபன் பிளமிங்

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.அபிதாபியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. அதற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புவது ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது.

dhony,stephen pluming,ipl,csk ,டோனி, ஸ்டீபன் ப்ளூமிங், ஐபிஎல், சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்று அளித்த பேட்டியில், கேப்டன் டோனியின் பயிற்சி முறை, தயாரான விதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் முழு உடல்தகுதியுடனும், மனரீதியாக மிகவும் வலுவுடனும் இருக்கிறார். புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார். அணியில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் எங்களது பயிற்சி சிறப்பாக தொடங்கவில்லை என்று கூறினார்.

மேலும் அவர், எப்போதுமே தொடரின் முதல் ஆட்டம் பதற்றமும், பரபரப்பும் நிறைந்ததாக இருக்கும். அதுவும் சென்னை-மும்பை ஆட்டம் என்றால் நெருக்கடி அதிகமாகிவிடும். ஆனால் அதை அனுபவித்து, ரசித்து விளையாடுவோம். இந்த ஐ.பி.எல். போட்டியை வித்தியாசமான வியூகங்களுடன் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. உள்ளூர் மைதானத்திற்குரிய சாதகமான விஷயங்கள் என்று எதுவும் இந்த முறை இருக்காது. எல்லாமே வெளியூர் மைதானங்களில் நடக்கும் ஆட்டங்கள் போன்று தான் இருக்கும் என்று தெரிவித்தார்.

Tags :
|
|