Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டுவைன் பிராவோவை கை கழுவியதா சென்னை அணி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

டுவைன் பிராவோவை கை கழுவியதா சென்னை அணி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

By: Nagaraj Wed, 16 Nov 2022 11:01:42 PM

டுவைன் பிராவோவை கை கழுவியதா சென்னை அணி... அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த ஆண்டு போட்டியாளர்கள் பட்டியலில் இருந்து டுவைன் பிராவோ நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலமானது கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

players,list,ipl,series,auction,dwayne bravo ,வீரர்கள், பட்டியல், ஐபிஎல், தொடர், ஏலம், டுவைன் பிராவோ

இந்த நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். வீரர்களை தக்க வைப்பதற்கான காலக்கெடு டிந்துள்ளதால் விரைவில் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று தெரிகிறது.

டுவைன் பிராவோவை சென்னை அணி தக்க வைக்காததன் காரணம் என்று தெரியாத நிலையில் இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|
|