Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் போட்டிகளால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு ரூ.2000 கோடி வருமானம்

ஐபிஎல் போட்டிகளால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு ரூ.2000 கோடி வருமானம்

By: Nagaraj Mon, 14 Sept 2020 08:16:21 AM

ஐபிஎல் போட்டிகளால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு ரூ.2000 கோடி வருமானம்

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு ரூ.2000 கோடி வருமானம் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் தலைவிரித்து ஆடியதை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

ipl match,disney plus hotstar,revenue,advertising ,
ஐபிஎல் போட்டி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், வருமானம், விளம்பரம்

ஐபிஎல் போட்டி என்றாலே ரசிகர்களின் கூட்டம் அலைமோதும், ஒரு திருவிழா போல் மைதானம் காட்சி அளிக்கும். ஆனால் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் ஐபிஎல் போட்டியானது நடத்தப்படுவதை ஒட்டி, ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் ஐபிஎல் போட்டியினை தொலைக்காட்சியில் பார்ப்பதுதான்.

இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பினை ஸ்டார் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்தப் போட்டியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 6 மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்புவதால் விளம்பரம் மூலம் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு ரூ.2000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :