Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

By: Nagaraj Wed, 12 July 2023 5:37:06 PM

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள செர்பியாவின் ஜோகோவிச், 7வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூபிளை எதிர்கொள்கிறார்.

djokovic,match,qualifying,semifinals,tennis,wimbledon ,அரையிறுதி, ஜோகோவிச், டென்னிஸ், தகுதி, போட்டி, விம்பிள்டன்

இதில் ஜோகோவிச் முதல் செட்டை இழந்தார். சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் ஜோகோவிச் 4-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரோமன் சபியுலினுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags :
|
|