Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ்-ல் முதல் சுற்றை கைப்பற்றிய ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்-ல் முதல் சுற்றை கைப்பற்றிய ஜோகோவிச்

By: Nagaraj Thu, 03 Sept 2020 10:14:55 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்-ல் முதல் சுற்றை கைப்பற்றிய ஜோகோவிச்

துவக்கம் முதலே அதிரடியாக ஆடி ஆதிக்கம் செலுத்தி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றினை கைப்பற்றி உள்ளார் ஜோகோவிச்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த போட்டியானது உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்க ஓபனில் இருந்து ஆஷ்லி பார்டி, பியான்கா, வாங்க் குவாங்க் எனப் பலரும் விலகினர்.

open tennis,first round,djokovic,dominance,game ,ஓபன் டென்னிஸ், முதல் சுற்று, ஜோகோவிச், ஆதிக்கம், ஆட்டம்

மேலும் பயோ பபுள் முறையில் நேற்று ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது, இந்த ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் போஸ்னியா வீரர் டாமிர் ஜூம்ஹருக்கு களம் இறங்கினார்.

ஜோகோவிச் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி, ஆதிக்கம் செலுத்தி வந்தார். 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் ஜோகோவிச் செட்டைக் கைப்பற்றினார்.

இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா – மிசாகி டோகிக்கு எதிராகக் களம் இறங்கினார். மேலும் இந்தப் போட்டியில் ஓசாகா அவ்வப்போது தடுமாறினாலும் இறுதியில் 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

போட்டிக்குப் பின்னர் பேட்டி அளித்த ஒசாகா, “முதல் சுற்றில் மிசாகி டோய் போன்ற சிறந்த வீராங்கனையுடன் மோதுவது பதற்றத்தையே ஏற்படுத்தும். என்னுடைய கணிப்பினைப் போலவே ஆட்டமும் கடினமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

Tags :