Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முதல்சுற்றில் வெற்றி பெற்ற ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முதல்சுற்றில் வெற்றி பெற்ற ஜோகோவிச்

By: Nagaraj Wed, 30 Sept 2020 2:01:58 PM

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முதல்சுற்றில் வெற்றி பெற்ற ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீரர் பெரேட்டினி (இத்தாலி) 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வாசெக் போஸ்பிசிலை (கனடா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் மிகைல் மிர்ரை (சுவீடன்) வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றார்.

 ,பிரெஞ்ச் ஓபன், டென்னிஸ், ஜோகோவிச், நடால், வெற்றி

முன்னதாக 12 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஜெராசிமோவை (பெலாரஸ்) வெளியேற்றி வெற்றியோடு தொடங்கினார். பிரெஞ்ச் ஓபனில் தனது 94-வது வெற்றியை பதிவு செய்த நடால் அடுத்து அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டுவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையரில் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) முதல் தடையை கடப்பதற்கு 2 மணி 15 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. அவர், தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டிய மயார் ஷெரிப்பை (எகிப்து) 6-7 (9-11), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 62 நிமிடங்களில் மேடிசன் பிரிங்கிலை (அமெரிக்கா) தோற்கடித்தார்.

Tags :