Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் வெற்றி

By: Nagaraj Sat, 03 Oct 2020 09:17:25 AM

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் வெற்றி

அதிர்ச்சி தோல்வி.. பாரீஸ் நகரில் நடைபெற்றுவரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் 2 வது சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் லிதுவேனியா வீரர் ரிகார்டஸ் பெரான்கிசுடன் மோதினார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் பெரான்கிசுனைத் தோற்கடித்தார், மேலும் இதன்மூலம் 3 வது சுற்றுக்குள் கால் பதித்தார்.

மற்ற ஆட்டங்களில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவ், ஸ்பெயின் வீரர் கார்பாலெஸ் பானா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ரஷியா வீரர் கச்சனோவ், பிரேசில் வீரர் தியாகோ மான்டிரோ, ஸ்பெயின் வீரர் காரெனோ பஸ்டா, சிலி வீரர் கிறிஸ்டியன் காரின், ஹங்கேரி வீரர் மார்டன் புக்சோவிச் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

shock defeat,tunisia player,djokovic,field ,அதிர்ச்சி தோல்வி, துனிசையா வீராங்கனை, ஜோகோவிச், களம்

மேலும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுக்கு எதிராகக் களம் இறங்கினார்.

அந்த ஆட்டத்தில் ஆஸ்டாபென்கோ 6-4, 6-2 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவை தோற்கடித்து ஷாக் கொடுத்தார். மற்ற ஆட்டங்களில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின், ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, அமெரிக்கா வீராங்கனை டேனியலி காலின்ஸ், துனிசையா வீராங்கனை ஆன்ஸ் ஜாபெர் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

Tags :