Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம்

By: Karunakaran Mon, 14 Sept 2020 6:02:23 PM

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. முன்னணி நட்சத்திர வீரர்கள் சிலர் கொரோனா காரணமாக போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இந்நிலையில், அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார். முதல் செட்டை 6-2 என ஸ்வெரேவ் எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றி அசத்தினார். ஆனால் அதன்பின் மூன்றாவது செட்டில் தீம் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

dominic theme,us open tennis final,america,new york ,டொமினிக் தீம், யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனல், அமெரிக்கா, நியூயார்க்

மூன்றாவது செட்டை தீம் 6-4 என கைப்பற்றினார். அதன்பின் தொடர்ந்து 4வது செட்டையும் 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் தீம் ஆக்ரோஷமாக ஆடினார். இதனால் அந்த செட்டையும் 7-6 எனக் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என ஸ்வெரேவை வீழ்த்தி டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.4 மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் தீம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். முதல் 2 செட்டை இழந்தாலும் தளராமல் ஆடி டொமினிக் தீம் இறுதியில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :