Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பயிற்சியாளர் பதவியில் தொடர டிராவிட் விரும்புவாரா? ரசிகர்கள் சந்தேகம்

பயிற்சியாளர் பதவியில் தொடர டிராவிட் விரும்புவாரா? ரசிகர்கள் சந்தேகம்

By: Nagaraj Sat, 18 Nov 2023 6:12:03 PM

பயிற்சியாளர் பதவியில் தொடர டிராவிட் விரும்புவாரா? ரசிகர்கள் சந்தேகம்

புதுடில்லி: உலக கோப்பையுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட பயிற்சி ஊழியர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. பயிற்சியாளர் பதவியில் தொடர டிராவிட் விரும்புவாரா என்ற சந்தேகமும் உள்ளது.

ஒருவேளை அரையிறுதியில் இந்திய அணி தோற்று இருந்தால் அந்த முடிவில் மாற்றம் இருந்திருக்காது. ஆனால் பயிற்சியாளர் ராகுல் ‘டிராவிட் மாடல்’ யோசனைகளால் இந்த தொடர் முழுவதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி இந்தியா மட்டும்தான். இந்த தொடரில் இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றியை ருசித்துள்ளது. அதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற பதவியில் டிராவிட் தொடருவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

dravid,india,model,series,win, ,இந்தியா, டிராவிட், தொடரும், தொடர், மாடல், வெற்றி

பைனல் வரை அழைத்து வந்த பயிற்சியாளரை மாற்றுவது தேவையற்ற விமர்சனங்களை தான் ஏற்படுத்தும். எனினும் பயிற்சியாளர் பதவியில் தொடர டிராவிட் விரும்புவாரா என்ற சந்தேகமும் உள்ளது. பயிற்சியாளர் பதவியில் டிராவிட் தொடர விரும்பினால் அதை பிசிசிஐயால் நிராகரிக்க முடியாது. அதே நேரத்தில் டிராவிட் தொடராவிட்டாலும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் ஆகியோருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கும் வாய்ப்பு அதிகம்.

இந்நிலையில் உலக கோப்பைத் தொடருக்கு பிறகு நவ.23ம் தேதி முதல் டிச.3ம் தேதி வரை இந்தியா-ஆஸி இடையிலான டி20 தொடர் தொடங்குகிறது. மொத்தம் 5 ஆட்டங்களை கொண்ட இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் பணியாற்ற உள்ளார். அதே நேரத்தில் டி20 தொடருக்கான இந்திய அணியை உலக கோப்பை பைனலுக்கு பிறகு பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|
|
|
|