Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய ட்ரீம் லெவன் நிறுவனம்

ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய ட்ரீம் லெவன் நிறுவனம்

By: Karunakaran Tue, 18 Aug 2020 6:23:29 PM

ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய ட்ரீம் லெவன் நிறுவனம்

உலகளவில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு மிகப்பெரும் வரவேற்பு உள்ளது. இதனால், அந்தப் போட்டிகளின் போது விளம்பரம் செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான டைட்டில் ஸ்பான்சரை 2,200 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விவோ நிறுவனம் பெற்றது.

லடாக் எல்லை மோதலில் இந்திய வீரர்களின் மரணத்திற்கு பின், இந்திய-சீன உறவில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக சீனாவின் விவோ நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து டைட்டில் ஸ்பான்சராக எந்த நிறுவனம் வரும் என்ற கேள்வி எழுந்துவந்தது.

dream eleven,title sponsor,ipl 2020 series,vivo ,ட்ரீம் லெவன், தலைப்பு ஸ்பான்சர், ஐபிஎல் 2020 தொடர், விவோ

ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சரை பெற பி.சி.சி.ஐ ஏலம் நடத்தியது. இந்த ஏலத்தில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்தியாவில் பதஞ்சலி நிறுவனம் ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சரை வாங்குவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இந்த ஏலத்தில் ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு வென்றுள்ளது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கும், பைஜூஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கும் ஏலம் குறிப்பிட்டிருந்தனர்.

Tags :