Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு நிச்சயதார்த்தம்

By: Karunakaran Fri, 21 Aug 2020 7:44:34 PM

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு நிச்சயதார்த்தம்

2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியில் விஜய் சங்கர் இடம் பெற்றார். விஜய் சங்கர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இதுவரை இந்திய அணிக்காக 12 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் விஜய் சங்கருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வைஷாலி விஸ்வேஸ்வரன் என்ற பெண்ணுடன் தனக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதைச் சமூகவலைத்தளங்கள் வழியாக விஜய் சங்கர் அறிவித்துள்ளார்.

engagement,indian cricketer,all-rounder,vijay shankar ,நிச்சயதார்த்தம், இந்திய கிரிக்கெட் வீரர், ஆல்ரவுண்டர், விஜய் சங்கர்

திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்களை விஜய் சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். ரசிகர்கள் உள்பட கிரிக்கெட்டின் மூத்த மற்றும் சக வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஜய் சங்கருக்கு கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சாஹல், ஸ்ரேயாஸ் ஐயர், அபினவ் முகுந்த் மற்றும் ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் 2020 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :