Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலை

By: Karunakaran Sun, 12 July 2020 11:53:50 AM

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலை

தற்போது உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கொரோனா காரணமாக உலகம் முழுவதும் நடைபெறவிருந்த பல்வேறு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் வந்தன. தற்போது சில விளையாட்டு போட்டிகள் கொரோனா காரணமாக ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜேசன் ஹோல்டர், கேப்ரியல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். இதனால் அவர்களது தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.

west indies,first test,england,cricket ,மேற்கிந்திய தீவுகள், முதல் டெஸ்ட், இங்கிலாந்து, கிரிக்கெட்

அதன்பின் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது, இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம், இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை விட170 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியின் ரொரி பர்ன்ஸ் 42 ரன்னும், சிப்லி அரை சதமும், கிராலே 76 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 46 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்ரியல் 3 விக்கெட்டும், சேஸ், ஜோசப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.




Tags :