Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற 300 ரன்களுக்கு மேல் சேர்க்க வேண்டும் - அசார் அலி

இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற 300 ரன்களுக்கு மேல் சேர்க்க வேண்டும் - அசார் அலி

By: Karunakaran Mon, 29 June 2020 1:11:49 PM

இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற 300 ரன்களுக்கு மேல் சேர்க்க வேண்டும் - அசார் அலி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று லாகூரில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது. 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், ஜூலை 13-ந்தேதியில் இருந்து பயிற்சியை தொடங்குவார்கள். இந்த போட்டித் தொடருக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் 35 வயதான அசார் அலி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேட்டி அளித்தபோது, மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது உற்சாகம் அளிக்கிறது. வீரர்களும் களம் காண ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ‘வாட்ஸ்அப்’ குரூப் மூலம் எங்களுக்குள் தொடர்பை உருவாக்கி, வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு தொடர்ந்து உடல்தகுதியை பேணுவதில் கவனம் செலுத்தினோம் என்று கூறியுள்ளார்.

azhar ali,england,pakistan captain,cricket ,அசார் அலி, இங்கிலாந்து, பாகிஸ்தான் கேப்டன், கிரிக்கெட்

முந்தைய உள்நாட்டு டெஸ்டுகளில் எங்களது வீரர்களில் நிறைய பேர் சதம் அடித்த அதே நம்பிக்கையுடன் இங்கிலாந்துக்கு பயணிக்கிறோம். இங்கிலாந்தில் ரன் எடுப்பது எப்போதும் கடினம்தான். ஆனால் எங்களது பேட்ஸ்மேன்கள் 300 மற்றும் அதற்கு மேல் ரன்கள் குவித்து விட்டால் இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும், எங்களது வேகப்பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறோம். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி பந்து வீசும் விதம் எந்த அணிக்கும் நெருக்கடியை கொடுக்கும். இதேபோல் நசீம் ஷா அதிக வேகத்துடன் வீசக்கூடியவர். முகமது அப்பாஸ் அனுபவம் வாய்ந்தவர். அத்துடன் திறமையான இளம் வீரர்களும் இருக்கிறார்கள் என அசார் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags :