Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கத்தார் கால்பந்து போட்டியில் இன்று இங்கிலாந்து - ஈரான் அணிகள் போட்டி

கத்தார் கால்பந்து போட்டியில் இன்று இங்கிலாந்து - ஈரான் அணிகள் போட்டி

By: Nagaraj Mon, 21 Nov 2022 10:20:14 AM

கத்தார் கால்பந்து போட்டியில் இன்று இங்கிலாந்து - ஈரான் அணிகள் போட்டி

கத்தார்: இன்று இங்கிலாந்து - ஈரான் அணிகள் பலப்பரீட்சை... கத்தாரில் நேற்று பிரம்மாண்டமாக 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியது. 2வது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகுடம் சூடும் சாம்பியன்களில் ஒருவராக கணிக்கப்பட்ட ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து கடந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

england,fifa football,iran, ,இங்கிலாந்து, ஈரான், உலகக்கோப்பை, முதல் முறை, கால்பந்து

இதுவரை 51 சர்வதேச கோல்களை அடித்துள்ள ஹாரி கேன், இங்கிலாந்தின் அதிக கோல்கள் அடித்த வீரராக வெய்ன் ரூனியை (53 கோல்கள்) முந்தியுள்ளார். தகுதிச் சுற்றில் 11 கோல்கள் அடித்த சர்தார் அஸ்மான், தொடை தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருவது அணிக்கு பின்னடைவாகும்.

121 ஆட்டங்களில் விளையாடிய மூத்த கேப்டன் ஈசன் ஹஜாபி, மெஹ்தி தரேமி, அலிஜெரா ஜஹான்பக்ஷ் ஆகியோரை பெரிதும் நம்பியிருக்கும் ஈரானுக்கு பின்னடைவு. 6வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடி வரும் ஈரான், முதல் சுற்றை கூட கடக்கவில்லை. இந்த முறையும் கஷ்டம்தான். இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

Tags :
|