Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

By: Karunakaran Sat, 28 Nov 2020 11:54:59 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான பவுமா 5 ரன்னிலும், டி காக் 30 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய டு பிளசிஸ் அபாரமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 58 ரன்னில் வெளியேறினார். வான் டர் டுசன் 37 ரன்னும், கிளாசன் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

england,t20 match,south africa,5 wicket ,இங்கிலாந்து, டி 20 போட்டி, தென்னாப்பிரிக்கா, 5 விக்கெட்

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். டேவிட் மலன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் 37 ரன் எடுத்து வெளியேறினர். இயான் மார்கன் 12 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 19.2 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 86 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். ஆட்டநாயகன் விருது பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் டி 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Tags :