Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

By: Nagaraj Mon, 10 Oct 2022 10:12:20 PM

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது. பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா முதலில் பீல்டிங்கை தீர்மானித்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. இதில் அணியின் அதிகப்பட்சமாக அலெக்ஸ் ஹெல்ஸ் 84, ஜோஸ் பட்லர் 68 ரன்கள் எடுத்தனர்.

man of the match,wicket,bowling,runs,england ,ஆட்டநாயகன், விக்கெட், பந்து வீச்சு, ரன்கள், இங்கிலாந்து

ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி பந்துவீச்சில், நாதன் எலீஸ் 3 விக்கெட்டுகளையும் கேன் ரிச்சட்சன், டேனில் சேம்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 208 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்ங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்சமாக, டேவிட் வார்னர் 73, மிட்செல் மார்ஷ் 36 ரன்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், மார்க்வுட் 3 விக்கெட்டுகளையும் ரீஸ் டொப்லே மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அடில் ராஷித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 12 பவுண்ட்ரிகள் அடங்கலாக 84 ரன்களை எடுத்த அலெக்ஸ் ஹெல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Tags :
|
|