Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி

By: Nagaraj Mon, 12 Sept 2022 7:19:26 PM

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி

லண்டன்: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது...தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாகவும் 2-வது நாள் ஆட்டம் அரசி எலிசபெத் மறைவு காரணமாகவும் கைவிடப்பட்டன. இதனால் மீதமுள்ள மூன்று நாள்களுக்கு மட்டுமே டெஸ்ட் நடைபெற்றது.

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 118 ரன்களுக்கும் 2-வது இன்னிங்ஸில் 169 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 158 ரன்கள் எடுத்தது. டெஸ்டை வெற்றி பெற 130 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

test match,england,abaram,won,south africa,london ,டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து, அபாரம், வென்றது, தென்ஆப்பிரிக்கா, லண்டன்

4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்திருந்தது. லீஸ் 32, கிராவ்லி 57 ரன்கள் எடுத்திருந்தார்கள். இந்நிலையில் இன்று 22.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 3-வது டெஸ்டை அபாரமான முறையில் வென்றது இங்கிலாந்து அணி. கிராவ்லி 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.


3-வது டெஸ்டை வென்ற இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்டில் மொத்தமாகவே 151.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

Tags :
|
|