Advertisement

போதும் டி20 போட்டி... இனி டெஸ்ட், ஒருநாள் போட்டிதான்

By: Nagaraj Mon, 05 Sept 2022 9:46:36 PM

போதும் டி20 போட்டி... இனி டெஸ்ட், ஒருநாள் போட்டிதான்

வங்கதேசம்: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணி விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசியக் கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி இலங்கையிடம் தோற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது 35 வயதான முஷ்ஃபிகுர் ரஹிம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 102 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 1500 ரன்களை எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 115. சராசரி 19.5.

twitter,rest,announced,test,odi,bangladesh ,ட்விட்டர், ஓய்வு, அறிவித்தார், டெஸ்ட், ஒரு நாள் போட்டி, வங்கதேசம்

“சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். வாய்ப்பு வரும்போது கிளப்தொடர்களில் விளையாட நான் தயாராக இருப்பேன். டெஸ்ட் மட்டும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக" தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags :
|
|
|