Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு

By: Karunakaran Tue, 06 Oct 2020 3:31:04 PM

ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த நஜீப் தரகாய், ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஜலதாபாத் நகரில் உள்ள கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது சாலையைக் கடந்து செல்லுகையில் எதிர்பாராத விதமாக அவர் மீது கார் மோதியது.

பின்னர் விபத்தியில் சிக்கிய அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நஜீப் தரகாய் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

afghan cricketer,road accident,najeeb-tarakai,condolness ,ஆப்கான் கிரிக்கெட் வீரர், சாலை விபத்து, நஜீப்-தாராகை, இரங்கல்

இதுகுறித்து தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிரடியாக ஆடக்கூடிய நஜீப் தரகாய் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஜீப் தரகாய் மறைவிற்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நஜீப் தரகாய் 24 முதல் தர கிரிக்கெட்டில் 47.20 சராசரியாக 2030 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் ஸ்பாகெட்டி கிரிக்கெட் லீக்கில் ஒரு வலுவான காட்சியைக் காட்டினார். அவர் தனது முழு வாழ்க்கையிலும் 33 இருபதுக்கு -20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Tags :