Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரே கடைசி... மெஸ்சி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரே கடைசி... மெஸ்சி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

By: Nagaraj Fri, 07 Oct 2022 11:30:25 AM

இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரே கடைசி... மெஸ்சி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

பியூனஸ் அயர்ஸ்: இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரே தனது கடைசி கால்பந்து உலகக் கோப்பையாக இருக்கும் என மெஸ்சி அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.


உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அடுத்த மாதம் கத்தாரில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி.

உலகின் ‘ஆல்-டைம்’ சிறந்த கால்பந்து வீரர்களில் மெஸ்ஸிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. 2006 ஆம் ஆண்டு, உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக அறிமுகமானார்.

last world cup,messi,qatar,world cup football,world cup soccer festival ,கடைசி உலக கோப்பை., கால்பந்து திருவிழா, பதற்றம், மெஸ்ஸி, ரசிகர்கள்

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரே தனது கடைசி கால்பந்து உலகக் கோப்பையாக இருக்கும் என மெஸ்சி அறிவித்துள்ளார்.


இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய மெஸ்சி, இது நிச்சயம் எனது கடைசி உலக கோப்பை. இந்த முடிவை எடுத்துள்ளேன். உலகக் கோப்பைக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம். என்ன நடக்கப் போகிறது, இந்த உலகக் கோப்பை தொடர் எப்படிப் போகிறது என்ற பதற்றம் நிலவுகிறது. இந்த தொடர் எங்களுக்கு நன்றாக அமைய வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.இந்த அறிவிப்பால் மெஸ்சியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Tags :
|
|