- வீடு›
- விளையாட்டு›
- கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியை காண குவிந்த ரசிகர்கள்
கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியை காண குவிந்த ரசிகர்கள்
By: Nagaraj Wed, 22 Mar 2023 11:44:06 PM
பியூனஸ் அயர்ஸ்: குவிந்த ரசிகர்கள்... அர்ஜென்டினா அணிக்காக விளையாட சொந்த ஊர் திரும்பிய கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியை காண ரசிகர்கள் அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்பாக குவிந்தனர்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் கோப்பை வென்று அர்ஜென்டினாவுக்கு பெருமை சேர்த்தவர் மெஸ்ஸி. இவர் ஐரோப்பிய கிளப் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் பியூனஸ் அயர்ஸ் திரும்பினார்.
அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்பாக ரசிகர்கள் குவிந்தனர். அவரை பெயர் சொல்லி அழைத்து தங்களை காண வருமாறு முழக்கமிட்டனர். மெஸ்ஸி மனாமா அணியுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அர்ஜென்டினா வந்துள்ளார்.
Tags :
messi |
hotel |
fans |
gathered |