Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கூகுளில் ரஷித் கான் மனைவி அனுஷ்கா ஷர்மா என காட்டியதால் ரசிகர்கள் அதிர்ச்சி

கூகுளில் ரஷித் கான் மனைவி அனுஷ்கா ஷர்மா என காட்டியதால் ரசிகர்கள் அதிர்ச்சி

By: Karunakaran Tue, 13 Oct 2020 1:05:20 PM

கூகுளில் ரஷித் கான் மனைவி அனுஷ்கா ஷர்மா என காட்டியதால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஷித் கான் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரரக திகழ்கிறார். ஐபிஎல், கரீபியன் பிரிமீயர் லீக், பிக் பாஷ் போன்ற தொடர்களில் விளையாடுகிறார். இந்நிலையில், கூகுள் தேடுதலில் ரஷித் கானின் மனைவி என டைப் செய்தால் அனுஷ்கா ஷர்மவின் விவரங்களை காண்பிக்கிறது.

ரஷித் கான் திருமணம் குறித்த தகவலில் திருமணம் ஆனதாகவும், மனைவி பெயர் அனுஷ்கா ஷர்மா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விராட் கோலியுடன் அனுஷ்கா ஷர்மா திருமணம் செய்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் ஆன தேதியை காட்டுகிறது. அனுஷ்கா ஷர்மா விராட் கோலியின் மனைவி ஆவார். 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

rashid khan,anushka sharma,google,virat kohli ,ரஷீத் கான், அனுஷ்கா சர்மா, கூகிள், விராட் கோஹ்லி

அடுத்த வருடம் ஜனவரியில் அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. கூகுளில் ரஷித் கான் மனைவி என டைப் செய்தால் அனுஷ்கா ஷர்மாவின் பெயர் வரக் காரணம் என்ன? கடந்த 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் செசனில் ரசிகர் ஒருவர் ரஷித் கானிடம் பிடித்த பாலிவுட் நடிகை யார்? எனக் கேட்ட கேள்விக்கு ரஷித் கான், அனுஷ்கா சர்மா மற்றும் பிரித்தி ஜிந்தா எனக் கூறியிருந்தார்.

அதன்பின், பத்திரிகைகள் ரஷித் கானுக்கு பிடித்த நடிகை அனுஷ்கா ஷர்மா என பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் ரஷித் கான் கடும் கோபம் அடைந்தார். தொடர்ந்து இதுகுறித்து செய்திகள் வந்துகொண்டிருந்ததால், அனுஷ்கா ஷர்மா ரஷித் கானின் மனைவி என கூகுள் வெளிக்காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|