Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடந்தால் ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் - ஆஸ்திரேலியா அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடந்தால் ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் - ஆஸ்திரேலியா அறிவிப்பு

By: Karunakaran Sun, 21 June 2020 2:10:56 PM

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடந்தால் ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் - ஆஸ்திரேலியா அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அடுத்த மதம் முடிவெடுக்கவுள்ளது.

இந்நிலையில், உலககோப்பை போட்டியை நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த ஆண்டு உலகக்கோப்பை நடைபெற வாய்ப்பு இல்லை என ஐ.சி.சி. அமைப்பில் இருப்பவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான ஈசான் மானி கூறியிருந்தார்.

australia,t20 world cup,cricket,coronavirus ,ஆஸ்திரேலியா,டி20 உலக கோப்பை,ரசிகர்களுக்கு அனுமதி,கொரோனா

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்ளே உலக கோப்பை நடைபெற்றால் ரசிகருக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், உலக கோப்பையில் விளையாட 15 நாட்டு வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட்டால் ரசிகர்களையும் தடுத்து நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ரசிகர்கள் இல்லாமல் உலக கோப்பை இல்லை. கொரோனா தொற்று உலகளவில் இருப்பதால் 15 அணிகளையும் வரவழைப்பது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும் என்று தெரிவித்துள்ளார்.


Tags :