Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய அணியில் மீண்டும் இணைந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

இந்திய அணியில் மீண்டும் இணைந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

By: Nagaraj Tue, 01 Aug 2023 07:05:28 AM

இந்திய அணியில் மீண்டும் இணைந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

புதுடில்லி: மீண்டும் இந்திய அணியில் பும்ரா... இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறா. கடைசியாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு அவருக்கு காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த ஜஸ்பிரித் பும்ரா, அயர்லாந்து செல்லும் டி20 இந்திய அணிக்குக் கேப்டனாக மீண்டும் திரும்ப இருக்கிறார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இவற்றில் டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டியில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

ireland,captain,indian team,bumrah,retired,featured ,அயர்லாந்து, கேப்டன், இந்திய அணி, பும்ரா, ஓய்வு, இடம்பெற்றார்

மேலும் நாளை நடைபெற உள்ள மூன்றாவது ஒரு நாள் போட்டிதான் ஒருநாள் தொடரைக் கைப்பற்றப்போவது எந்த அணி என்பது தெரிய வரும். அதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டிகள் முடிந்ததும் இந்திய அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக பும்ராவும், துணைக் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

அயர்லாந்துக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணி விவரம்: ஜஸ்பரீத் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர்.

Tags :
|