Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்பட ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்பட ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

By: Karunakaran Fri, 21 Aug 2020 7:05:38 PM

மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்பட ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவிக்கும். இந்த விருதினை பெற, ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் அந்தந்த துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை மத்திய விளையாட்டுதுறைக்கு பரிந்துரை செய்யும்.

இந்த வீரர்கள் இந்த விருதை பெற தகுதி உடையவர்கள் தான என ஆராய ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு கடந்த சில தினங்களுக்கு முன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட ஐந்து பேர் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்தது.

mariappan thangavelu,cricketer,rohit sharma,,rajiv gandhi kale ratna ,மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர், ரோஹித் சர்மா, ராஜீவ் காந்தி காலே ரத்னா

தற்போது இன்று இந்த விருதுக்கான பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கன ராணி ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும். மேலும், அட்னானு தாஸ் (வில்வித்தை), டூட்டி சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் செட்டி (பேட்மிண்டன்), சுபேதர் மணிஷ் கவுசிக், லாவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை) உள்ளிட்டமொத்தம் 27 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|