Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதாக கால்பந்து வீரர் நெய்மர் மீது குற்றச்சாட்டு

சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதாக கால்பந்து வீரர் நெய்மர் மீது குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 05 July 2023 8:38:39 PM

சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதாக கால்பந்து வீரர் நெய்மர் மீது குற்றச்சாட்டு

பிரேசில்: பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் சட்டத்தை மீறி சொகுசு பங்களாவில் பணிகள் மேற்கொண்டதாக கால்பந்து வீரர் நெய்மர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர். பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தனது கடற்கரையோர சொகுசு பங்களாவில் செயற்கை ஏரியை கட்டியுள்ளார். பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் சட்டத்தை மீறி பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, பிரேசில் நாட்டு சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து செயற்கை ஏரி அமைக்க அனுமதி பெறாதது, ஆற்று நீரை திசை திருப்புவது, நிலத்தை வெட்டுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அரசு தடை விதித்துள்ளது.

environment,neymar,penalty,rule,sector ,அபராதம், சுற்றுச்சூழல், துறை, நெய்மார், விதி

ஆனால் நெய்மர் அந்த ஏரியில் நீராடியதாகவும், பார்ட்டி நடத்தியதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த பங்களா அமைந்துள்ள மங்கராதிபா பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கை ஏரி அமைத்ததில் சுற்றுச்சூழல் விதி மீறல்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பிரேசில் அரசு நெய்மாருக்கு 3.3 மில்லியன் டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.28.6 கோடி) அபராதம் விதித்துள்ளது. நெய்மருக்கு அண்மையில் வலது கணுக்கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் ஓய்வில் உள்ளார். இந்த அபராதம் தொடர்பாக அவர் சட்ட ரீதியாக முறையிட 20 நாட்கள் அவகாசம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|