Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்ட கால்பந்து வீரர் நெய்மர்

கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்ட கால்பந்து வீரர் நெய்மர்

By: Nagaraj Thu, 22 June 2023 11:52:38 PM

கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்ட கால்பந்து வீரர் நெய்மர்

பிரேசில்: பகிரங்க மன்னிப்பு கோரினார்... பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அண்மையில், மாடல் அழகி ஒருவருடன் நெய்மர் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசு செய்திகள் வெளியானது. இதையடுத்து, புருனா பியான்கார்டி - நெய்மர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

mistakes,neymar,friends,family,apologized ,தவறுகள், நெய்மர், நண்பர்கள், குடும்பத்தினர், மன்னிப்பு, கோரினார்

இந்நிலையில், காதலி புருனா பியான்கார்டியை தனது கனவுப்பெண் எனவும், வாழ்க்கையின் ஒரு பகுதியான அவள் தன்னுடன் வேண்டும் எனவும் இன்ஸ்டாகிராமில் நெய்மர் உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார்.

விளையாட்டு களத்திலும், வெளியேயும் பல தவறுகளை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ள நெய்மர், நண்பர்கள் குடும்பத்தினருடன் இருக்கும்போது அவற்றை எல்லாம் சரிசெய்ததாகவும் கூறியுள்ளார்.

Tags :
|
|