Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • புவனேஷ்குமார் குறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

புவனேஷ்குமார் குறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

By: Nagaraj Mon, 03 Oct 2022 09:58:06 AM

புவனேஷ்குமார் குறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

லாகூர்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால், புவனேஷ்வர் குமாரின் ஓவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களால் அடித்து நொறுக்கப்படும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடவில்லை. அதுமட்டும் இல்லாமல் புவனேஷ்வர் குமார் ஓவரில் எதிரணியினர் ரன் குவித்து வருகின்றனர். இந்திய அணியின் தோல்விற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால், புவனேஷ்வர் குமாரின் ஓவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களால் அடித்து நொறுக்கப்படும்.

setback,bhuvnesh kumar,injury,india,cricket team,review ,பின்னடைவு, புவனேஷ்குமார், காயம், இந்தியா, கிரிக்கெட் அணி, விமர்சனம்

ஆஸ்திரேலியாவில் பந்து நன்றாக பேட்டிற்கு நேர் வரும். இதனால் புவனேஷ்வர் குமாரை விட தீபக் சாகர் சிறந்த தேர்வாக இருப்பார் என்றார். தீபக் சாகர் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடிய வீரர். எனவே அவரை இந்திய அணியில் விளையாட வைப்பது சிறந்த முடிவாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தீபக்சாகர் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் மீதமுள்ள போட்டிகளில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய அணி நிர்வாகம் புவனேஷ்வர் குமாரை ஆடும் லெவனில் மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் பெரிதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயத்தால் அவதிப்படும் பும்ராவுக்கு இந்தியாவில் இடம் கிடைக்காவிட்டால் அது பெரிய பின்னடைவாகும்.

Tags :
|
|