Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளிக்காதது குறித்து முன்னாள் வீரர் கருத்து

தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளிக்காதது குறித்து முன்னாள் வீரர் கருத்து

By: Nagaraj Fri, 12 Aug 2022 10:02:45 AM

தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளிக்காதது குறித்து முன்னாள் வீரர் கருத்து

புதுடில்லி: இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (37). தமிழகத்தை சேர்ந்த இவர் கடந்த ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக 13 இன்னிங்சில் கடைசி 16 முதல் 20 ஓவர்களில் விளையாடிய 121 பந்துகளில் 251 ரன் குவித்தார்.


இதேபோல இந்திய அணியிலும் ரன் சேர்க்கிறார். கடைசி கட்ட ஓவர்களில் சந்தித்த 104 பந்தில் 164 ரன் எடுத்துள்ளார். ஒவ்வொரு 4 பந்திலும் ஒரு பவுண்டரி அடித்து, சிறந்த 'பினிஷராக' ஜொலிக்கிறார்.
வரும் உலக கோப்பை 'டி-20' தொடரில் அணியில் இடம் பெறுவார் என நம்பப்படுகிறது. ஆனால், இவரை சரியான நேரத்தில் களமிறக்காமல், தாமதம் செய்கின்றனர்.

dinesh karthik,chance,denial,eccentricity,finisher,cricket ,தினேஷ் கார்த்திக், வாய்ப்பு, மறுப்பது, விசித்திரம், பினிஷர், கிரிக்கெட்

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் விவேக் ரஸ்தான் கூறியதாவது: 'பினிஷர்' பொறுப்பில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது கடினமானது. ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி இருக்கும். இதனால் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு விரைவில் வீழ்த்த முயற்சிப்பர்.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் 'பினிஷர்' என்ற முறையில் மட்டும் தான் தேர்வு செய்துள்ளனர். ஆனால் இவரை சரியான நேரத்தில் களமிறக்காமல், வாய்ப்பு கொடுக்க மறுப்பது விசித்திரமாக உள்ளது. சூர்யகுமார், கோஹ்லி, பாண்ட்யா, தீபக் ஹூடா உள்ளிட்டோர் தினேஷ் கார்த்திக் பணியை செய்வார்களா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|