Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • எம்எஸ் டோனி 7-வது இடத்தில் களம் இறங்கியது குறித்து கம்பிர் கடும் விமர்சனம்

எம்எஸ் டோனி 7-வது இடத்தில் களம் இறங்கியது குறித்து கம்பிர் கடும் விமர்சனம்

By: Karunakaran Wed, 23 Sept 2020 6:10:36 PM

எம்எஸ் டோனி 7-வது இடத்தில் களம் இறங்கியது குறித்து கம்பிர் கடும் விமர்சனம்

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வீரராக களம் இறங்கினார். 217 ரன் இலக்கு இருக்கும்போது டோனி 7-வது வரிசையில் ஆடியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம் கர்ரன், ருத்துராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ், ஆகியோருக்கு பிறகே டோனி களமிறங்கினார்.

அவர் களத்தில் குதிக்கும்போது அணியின் ரன் ரேட் எட்ட முடியாத அளவில் மிகவும் கடினமாக இருந்தது. வெற்றிக்கு 38 பந்தில் 108 ரன் தேவையாக இருந்தது. டு பிளிஸ்சிஸ் ஒரு முனையில் அபாரமாக ஆடியபோது மறுமுனையில் இருந்த டோனி அதிரடியாக ஆடவில்லை. ஆட்டத்தின் கடைசி ஓவரில்தான் அவர் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்தார். இதனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

gambhir,ms dhoni,rajasthan team,ipl ,கம்பீர், எம்.எஸ் தோனி, ராஜஸ்தான் அணி, ஐ.பி.எல்

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் இதுகுறித்து கூறுகையில், 217 ரன் இலக்கு தேவைப்படும்போது, டோனி 7-வது வரிசையில் களம் இறங்கியது தவறான முடிவு ஆகும். அவர் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. இது முழுமையான தவறான கணக்கீடாகும். அவருக்கு முன்பு ருத்துராஜ் கெய்க்வாட், சாம் கர்ரன் களம் இறங்கினார்கள். எனக்கு இது புரியாத புதிராக இருக்கிறது. டுபிளிஸ்சிஸ் தனி நபராக போராடினார் என்று கூறினார்.

மேலும் அவர், கடைசி ஓவரில் டோனி 3 சிக்சர்களை விளாசியது குறித்து நீங்கள் பேசலாம். ஆனால் அதனால் என்ன பயன்? அதில் நேர்மை இல்லை. இது அவரது தனிப்பட்ட ரன்னாகி விடுகிறது. விளையாட்டில் வெல்லும் நோக்கம் தேவை. சீக்கிரமே வெளியேறினாலும் எந்த தவறும் இல்லை. குறைந்த பட்சம் முன்னால் சென்று அணியை வழிநடத்துங்கள். நீங்கள் முன்னதாக ஆடி இருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி இருக்க முடியும். சாம் கர்ரன், கெய்க்வாட், கேதர் ஜாதவ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் உங்களை விட சிறந்தவர்கள் என்று ரசிகர்களை நம்ப வைக்கிறீர்கள் என்று கூறினார்.

Tags :