Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்ககள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பெற்ற கிளன் மேக்ஸ்வெல்

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்ககள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பெற்ற கிளன் மேக்ஸ்வெல்

By: Nagaraj Tue, 17 Oct 2023 5:18:28 PM

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்ககள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பெற்ற கிளன் மேக்ஸ்வெல்

லக்னோ: அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர்... இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் லக்னோவில் நேற்று இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

sixers,foreign player,pride,indian soil,competition ,சிக்ஸர்கள், வெளிநாட்டு வீரர், பெருமை, இந்திய மண், போட்டி

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தப் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இந்திய மண்ணில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மேக்ஸ்வெல். இந்திய மண்ணில் இதுவரை அவர் 51 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

இந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொல்லார்டு (49 சிக்ஸர்கள்), அஸ்கர் ஆஃப்கன் (48 சிக்ஸர்கள்), ஏபி டி வில்லியர்ஸ் (48 சிக்ஸர்கள்) உள்ளனர்.

Tags :
|
|