Advertisement

காயத்தால் விலகிய பேர்ஸ்டோவிற்கு பதில் ஹேல்ஸ் தேர்வு

By: Nagaraj Thu, 08 Sept 2022 08:41:24 AM

காயத்தால் விலகிய பேர்ஸ்டோவிற்கு பதில் ஹேல்ஸ் தேர்வு

லண்டன்: அவருக்கு பதில் இவர்... 'டி-20' உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் காயத்தால் விலகிய பேர்ஸ்டோவிற்கு பதிலாக ஹேல்ஸ் தேர்வானார்.


ஆஸ்திரேலியாவில், வரும் அக். 16 முதல் நவ. 13 வரை ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜானி பேர்ஸ்டோவ் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் கோல்ப் விளையாடிய போது இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு, உடனடியாக 'ஆப்பரேஷன்' செய்ய இருப்பதால் உலக கோப்பையில் இருந்து விலகினார்.

world cup,injured,withdrawn,england,australia ,உலக கோப்பை, காயம், விலகினார், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

இந்நிலையில் பேர்ஸ்டோவிற்கு மாற்றாக துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 2019ல் (மார்ச் 10) வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 'டி-20' போட்டியில் விளையாடிய இவர், மூன்று ஆண்டுகளுக்கு பின் சர்வதேச போட்டிக்கு திரும்பினார்.

தவிர இவர், வரும் செப். 20-அக். 2ல் பாகிஸ்தானில் நடக்கவுள்ள 7 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணிக்கும் தேர்வானார். இத்தொடருக்கு பின் ஆஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணி, உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக 3 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் விளையாடுகிறது.

Tags :